ஒரு வைரமுத்து புத்தகம் - தலைகீழாக
மடியில் கிடக்கிறது
நுாற்றாண்டுகள் கடந்த அந்த பழைய வானொலியில்
இளையராஜா பாடிக்கொண்டிருக்கிறார்,
எப்போதோ வாசித்த ஒரு நல்ல நாவல் பற்றி -
அம்மா பேசிக்கொண்டிருந்தாள் - அவள் கைகள்
தன்னிச்சையாக என் கூந்தலை முடிந்து கொண்டிருந்தது
திடிக்கிட்டு விழித்தேன்,
சுற்றியும் இறைந்து கிடந்தன புத்தகங்கள்
சுடச்சுட அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட -
மின்னஞ்சல்களை காட்டியது வெகு நேரமாய் - திறந்து
வைக்கப்பட்டிருந்த மடிக்கனனி,
சுட்டென்று ஒரு பத்து வருடம் முன்னே செல்ல
ஏதேனும் வழி....?
____________________________________________________________________________________________
✎Poem by:
Salma Farhath Farzan
Faculty of Commerce & Management Studies