நாங்களும் அழுகிறோம் கேட்கவில்லையா மானிடா...
உதவிகளும் செய்கிறோம் மறக்கிறாயே ஏனடா...
எங்களின் வளர்ச்சி சூழலுக்கோ குளிர்ச்சி...
எங்களை அழித்தால் உனக்கில்லையே மகிழ்ச்சி...
வெட்டுகிறாயே ஈவின்றி,
நீ வாழ வேண்டாமா ஈறலின்றி,
கொட்டுகின்ற மழை கூட எங்களால்தான் மறந்திடாதே!
நீ சுவாசிக்கும் தூய வளி எங்களால் தான் மறந்திடாதே!
எங்களை அழிப்பதாய் எண்ணி உன்னையே நீ அழிக்கிறாயே...
விட்டு விடடா மானிடா...
உன் இழிவான இச்செயலை...
வளர்த்து விடடா எங்களை...
வருத்தம் இனி உனக்கில்லை...
____________________________________________________________________________________________
✎Poem by:
Nawfer Ahlam
