Welcome to AIS UOK Blog! 🎉

Give it a search and experience our new blog.

You are our ... explorer!

நான் காணும் சமூகம்


இப்போதெல்லாம்...,

குயில் குரலல்ல // அவள் குரல்
மேடைகளில் முழக்கமிட்டதில்
கன்றிப்போயிருக்கலாம் //

நிலவுக்கும் அவள் முகத்துக்கும் // நெடுந்தூரம் 
சூரியத்தடங்கள் முகத்தில் கோலம் போட்டிருக்க 
விழிகளின் கீழே அவள் விழித்திருந்த கதை சொல்ல 
இருண்ட கருவளையங்கள் //

வெண்பஞ்சு கைகள் அல்ல அவை // 
கரண்டிகளோ பேனாக்களோ பிடித்ததில் அவற்றின் 
மென்மை தொலைந்து போய் பலகாலம் //

அவள் தரிசனம் கிடைப்பதொன்றும் // 
அவ்வளவு அரிதல்ல, // பெரும்பாலும் 
தெருக்களிலோ பஸ் நிலையங்களிலோ // 
அவள் காணக்கிடைப்பாள் //

உங்கள் அதிர்ந்த பேச்சுக்கோ, ஆறடி உயரத்துக்கோ 
அதிர்ந்து நிற்பவள் அல்ல அவள் // 
சூழ்நிலைகளை சூட்சுமமாக கையாளத்தெரிந்தவள்

இத்தனைக்குப் பிறகும், 
இன்னுமா // அவளை 
மலருக்கும் மதிக்கும் 
உவமிக்கிறீர்கள்...?


Poem by: 
Salma Farhath Farzan
Faculty of Commerce and Management Studies
Previous Post Next Post