Welcome to AIS UOK Blog! 🎉

Give it a search and experience our new blog.

You are our ... explorer!

அவளைப் பார்க்கிறேன்...


அவளைப் பார்க்கிறேன்,
கண்ணீர் துளிகள் கண்ணோரம் மின்ன- 
கூந்தல் கலைந்து காற்றில் பறக்க 
கனவுகள் தோய்ந்த கண்களோடு என்னை 
தீர்க்கமாய் பார்க்கிறாள் 

கலைந்து போன கனவுகள் பற்றி சொன்னாள் - 
உறவுகளுக்கு மனிதர் கற்பித்த வரைவிலக்கணங்கள் சொன்னாள் -
நிலையற்ற நட்பு கதைகள் நிறைய சொன்னாள்

திசை தெரியாத பயணங்களிலும் -
இடிந்து போன உறவுகளிலும் - 
கலைந்து போன கனவுகளிலும்
தன்னை தொலைத்துவிட்டதாய் சொல்லி - 
அழுதாள்.

ஆறுதலாய் அவள் கைகள் பற்றினேன் 
உன்னிடம் மட்டுமே சொன்னேன் - கூறி 
கண்களை அழுத்தித் துடைத்து 
கண்ணீரின் தடம் கூட தெரியாமல்
என்னை போலவே அழகாய் சிரித்தாள்
அவள்,

என் கண்ணாடி முன் நின்றவள்...
____________________________________________________________________________________________

✎Poem by: 
Salma Farhath


 

Previous Post Next Post